தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு வஉசி மார்க்கெட் ஐக்கிய வியா பாரிகள் சங்கம் சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி நகர தந்தை என போற்றப்படும் முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ் பர்னாந்தின் 152வது பிறந்தநாள் விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பில் குரூஸ்பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு, சங்க தலைவர் அன்புராஜ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ், குரூஸ் பர்னாந்து பேத்தி ரேமோலாவாஸ், குரூஸ்பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்டு, பொதுச் செயலாளர் சசிக்குமார், பொரு ளாளர் இக்னேஷியஸ், அமைப் பாளர் எட்வின் பாண்டியன் ஆகயோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் குரூஸ்பர்னாந்து நற்பணி மன்ற துணைத் தலைவர்கள் சேவியர்சில்வா, ரூஸ்வெல்ட், நிர்வாக செயலாளர் தினேஷ், துணைச்செயலாளர் ஜெயக்குமார், பேராசிரியை பாத்திமாபாபு, பரதர் நலச்சங்க தலைவர் ரெனால்ட் வில்லவராயர், செயலாளர் அந்தோணிசாமி, வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் பட்டுராஜா, துணை செயலாளர் சண்முகராஜ், சட்ட ஆலோசகர் செல்வ சேகர், மற்றும் சரவணகுமார், முத்துபால கிருஷ்ணன், மாரிமுத்து ஜேம்ஸ் துரைராஜ், வேல்சாமி, கண்ணன், ஜோசப் துரைச்சாமி, கதிரேசன், தர்மராஜ், செல்வகுமார், ஜெய ராமர், திசைக்கரை ராஜா, உத்திர பாண்டி மற்றும் நிர்வாகிகள், அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.