• vilasalnews@gmail.com

குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா; அனைவருக்கும் நன்றி: பரதர் நல தலைமை சங்கம் அறிவிப்பு

  • Share on

தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சருக்கு பரதர் தலைமைச் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா இன்று (15.11.2021) தூத்துக்குடியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி நகரின் மையப் பகுதியான தமிழ் சாலையில் அமைந்துள்ள ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து திருவுருவச்சிலைக்கு பரதர் நலச்சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பரதர் நல சங்க நிர்வாகிகள் கூறுகையில், ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்கள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் அவர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

  • Share on

குரூஸ்பர்னாந்து பிறந்தநாள் விழா: வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தினர் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

குரூஸ்பர்னாந்து பிறந்தநாள் : வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்!

  • Share on