பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பாக காமராஜ் கல்லூரி வளாகத்தில் கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது.
பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக காமராஜ் கல்லூரி வளாகத்தில் கல்வி கருத்தரங்கம் (நேற்று) 14.11.2021 நடைபெற்றது.
இவ்விழாவில், தேசியத் தலைவர் ப.காளிதாசன் அவர்கள் தலைமையேற்று சங்கம் கடந்த வந்த பாதைகள் குறித்தும், சிறிய இரத்தப் பரிசோதனை ஆய்வகங்களின் பிரச்சினைகள் குறித்தும் கார்ப்பரேட் லேப்ஸ் ஆதிக்கம் குறித்தும் உரையாற்றினார்.
மேலும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் (காச நோய்) Dr K.சுந்தரலிங்கம் MBBS,DTCD, அவர்கள் காசநோய் குறித்த விழிப்புணர்வும், அது குறித்த ஸ்டிக்கர் ஒன்றையும் வெளியிட்டு உரையாற்றினார்.
Dr M. பாலமுருகன் (Associate Dean) ஜிப்மர், காரைக்கால் அவர்கள் இரத்தசோகை(Anaemia) குறித்து மிக எளிமையாக அனிமியாவினால் வரும் பாதிப்புகள் குறித்தும், சமுதாயத்தில் அதன் தாக்கத்தை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். N. வெங்கடேஸ்வரன் CEO (நியூ டெல்லி) (NABL M(EL)T ஆய்வக நுட்பனர் களுக்கு காணொளி காட்சி மூலம் NABL பற்றி விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் அபி ராமகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார், விழா நிகழ்வு மூத்த ஆய்வக நுட்புனர் ரகுராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதனை தொடர்ந்து பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், மருந்தகங்களில் ரத்தப் பரிசோதனை செய்வதை தடை செய்ய வேண்டும். ஆய்வக நுட்புனர் களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெறப்படாத மருத்துவ ஆய்வக கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஆய்வக நுட்புனர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் பிரதீப், கிறிஸ்துராஜ் மூக்காண்டி, பூ ராஜா, அருண்குமார், ஜெபசிங், தங்க புஷ்ப, சந்தி கணபதி,மகாராஜன், மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தார்கள்
விழாவில் 200க்கும் மேற்பட்ட ஆய்வு நிபுணர்கள் கலந்து கொண்டனர்.