• vilasalnews@gmail.com

குறுக்குச்சாலை பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது - 1052 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் !

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 1052 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (14.11.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது குறுக்குச்சாலை பகுதியில், அதே பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் மனுவேல் (51) என்பவர் தனது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா வழக்குப்பதிவு செய்து மனுவேலை கைது செய்து அவரிடமிருந்து 1052 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்.

  • Share on

திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்? தூத்துக்குடி முன்னாள் திமுக பெண் மாமன்ற உறுப்பினர் புகார்!

பாராமெடிக்கல் லேப் கல்வி சார்பாக காமராஜ் கல்லூரி வளாகத்தில் கல்வி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

  • Share on