வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயரை திட்டமிட்டு நீக்கியிருப்பதாக தூத்துக்குடி முன்னாள் திமுக மாமன்ற பெண் உறுப்பினர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
நான் தூத்துக்குடி மாநகராட்சி வார்டு எண் 40, கதவு எண் 1/1 மீனாட்சிபுரம் கிழக்கு முகவரியில் 27 ஆண்டுகளாக என் கணவரோடு சொந்த குடியிருப்பில் குடியிருந்து வருகிறேன். 214 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பாகம் எண் 227 வரிசை எண் 31 இல் என்னுடைய பெயர் பதிவு உள்ளது.
தற்போது 01.11.2021 அன்று வாக்காளர் பதிவு அதிகாரியால் வெளியிடப்பட்ட 214 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில், தற்போதைய பாகம் எண் 228ல் என்னுடைய பெயர் விடுபட்டுள்ளது. நான் மேற்படி பகுதியில் 2006ல் திமுக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றியுள்ளேன். எனது கணவர் 1996 முதல் 2006 வரை தொடர்ந்து தூத்துக்குடி நகராட்சி திமுக உறுப்பினராக இருந்து மக்கள் பணி ஆற்றி யுள்ளார்.
தற்போது 2021இல் நடைபெற உள்ள தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் திமுக கட்சியின் சார்பாக மேற்படி வார்டில் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளேன்.
இந்நிலையில் என்மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், நான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்கத்தோடும், பிறர் தூண்டு தலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தற்போதைய பாகம் எண் 228ல் என்னுடைய பெயர் திட்டமிட்டு நீக்கம் செய்யப் பட்டுள்ளது. இது ஜனநாயக நீதிக்கு புறம்பானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே வாக்காளர் பட்டியலில் இருந்து என்னுடைய பெயரை நீக்கம் செய்தவர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வ துடன், வாக்காளர் பட்டியலில் பாகம் எண் 228ல் கதவு எண் 1/1 மீனாட்சிபுரம் கிழக்கு என்ற முகவரியில் என்னுடைய பெயரை மீண்டும் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்