தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவ சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குரூஸ் பர்னாந்தீஸ் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவசிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், மாவட்ட பொது செயலாளர் பிரபு, மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மான்சிங், மாவட்ட துணை தலைவர் மாரியம்மாள், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பால முருகன், தொழில் மற்றும் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சுவைதர், வடக்கு மண்டல தலைவர் கனகராஜ், கிழக்கு மண்டல தலைவர் சந்தணகுமார், தெற்கு மண்டல தலைவர் முத்து கிருஷ்ணன், வடக்கு மண்டல பொதுச்செயலாளர் செல்லப்பா, குருமூர்த்தி மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.