தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவ சிலைக்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குரூஸ் பர்னாந்தீஸ் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவசிலைக்கு தூத்துக்குடி மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் பொருளாளர் விஜயன், செயற்குழு உறுப்பினர் கள் தயாளலிங்கம், அலெக்ஸ் சாண்டர், பொதுக்குழு உறுப்பினர் ராஜ பொம்மு, ஒன்றிய செயலாளர் அதிசயராஜ், ஒன்றிய துணை செயலாளர் விஜயகுமார், பகுதி செயலாளர்கள் சண்முகம், நாராயண மூர்த்தி, சம்சுதீன், ராஜா முகமது, அரசமுத்து, வர்த்தக அணி செயலாளர் குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் செல்வம், மாவட்ட விவசாய அணி செயலாளர் மாரி மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.