தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசின் சார்பில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னாரின் புகழுக்கு பெருமைச் சேர்க்கின்ற வகையில் தூத்துக்குடியில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நவம்பர் 15-ம் தேதி இன்று குரூஸ் பர்னாந்தீஸ் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவசிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்க ள் பலர் கலந்துகொண்டனர்.