• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரபல ரவுடி உட்பட இருவர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரபல ரவுடி உட்பட இருவரை போலீசார்கைது செய்தனர்.

தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் துரைராஜ் (48). இவர் தனது நண்பரான தூத்துக்குடி எஸ்.எஸ் பிள்ளை தெருவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் அருண் (43) என்பவருடன் சேர்ந்து கடந்த 12.11.2021 அன்று இரவு தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் பகுதியில் உள்ள ஒரு சர்ச் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியைச் சேர்ந்த லூர்துசாமி மகன் ஜெர்விந்த் (22) மற்றும் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த அசோக் மகன் பூபஸ்டன் (27) ஆகிய இருவரும் அவர்கள் இருவரையும் வழிமறித்து துரைராஜிடம் பணம் கேட்டு அவதூறாக பேசி அரிவாளால் தாக்கியுள்ளனர். இதை தடுத்த அருணையும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து துரைராஜ் இன்று அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) முருகன் வழக்கு பதிவு செய்து ஜெர்விந்த் மற்றும் பூபஸ்டன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களில் ஜெர்விந்த் மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், கொள்ளை வழக்குகள் என 12 வழக்குகளும், பூபஸ்டன் மீது வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும் மற்றும் தாளமுத்து நகர் காவல் நிலையத் தில் ஒரு வழக்கு உட்பட மொத்தம் 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடிய இருவர் கைது!

குரூஸ் பர்னாந்தீஸ் சிலைக்கு எம்பி,அமைச்சர் மாலை அணிவிப்பு!

  • Share on