தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்த நயினார் மகன் வன்னியப்பன் (38) என்பவர் கடந்த 05.11.2021 அன்று தூத்துக்குடி போஸ்ட் ஆபீஸ் எதிர்புறம் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும் போது அந்த இரு சக்கர வாகனம் காணாமல் போயுள்ளது.
இதனையடுத்து வன்னியப்பன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தென்காசி மாவட்டம் வெள்ளக்கால் பகுதியைச் சேர்ந்த மூக்கையா மகன் மந்திரிகுமார் (32) மற்றும் ஒரு இளஞ்சிறாரும் சேர்ந்து வன்னியப்பனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் வழக்குப்பதிவு செய்து மந்திரிகுமார் மற்றும் இளஞ்சிறார் ஆகிய இருவரையும் கைது செய்தார்.