எப்போதும்வென்றான் அருகே பவர் பிளான்ட்டில் உள்ள பழைய இரும்பு பொருட்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
எப்போதும் வென்றான் குமரெட்டியாபுரம் பகுதியில் ஒரு பவர் பிளான்ட் உள்ளது. இந்த பவர் பிளான்ட் லேபர் குடியிருப்பு அருகில் பழைய இரும்பு சாமான்கள் உள்ள இடத்தில் இரும்பு பிளேட்டுகள் மற்றும் செயின் பட்டை ஆகியவை காணாமல் போனதாக பவர் பிளான்ட் மேனேஜரான சிவராமன் மகன் சுப்பா (45) என்பவர் இன்று எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் எப்போதும் வென்றான் கிழக்குத் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துமுருகன் (32), கண்ணங் கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்த வேல்சாமி மகன் சங்கர் (41), எப்போதும்என்றான் வடக்கு காலனியைச் சேர்ந்த முனியசாமி மகன் கார்த்திக் (32) மற்றும் எப்போதும்வென்றான் நடுத் தெருவைச் சேர்ந்த முருகேச பாண்டியன் மகன் கார்த்திக் (33) ஆகிய 4 பேரும் மேற்படி பவர் பிளான்ட்டில் பழைய இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் மேற்படி 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட மொத்தம் ரூபாய் 5000/- மதிப்புடைய 2 இரும்பு பிளேட்டுகள் மற்றும் பழைய செயின் பட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.