விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, சின்னப்பன் எம்எல்ஏ நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த ஒரிரு தினங்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையால், விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றல், குளம், கண்மாய் பகுதிகளில் நீர் வரத்து அதிகரிப்பு உள்ளிட்டவைகள் ஏற்பட்டது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை, மழையால் பாதிக்கப்பட்ட, விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றாக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அப்பொழுது பொதுமக்களின் தேவைகள், குறைகளை கேட்டறிந்து, அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுத்து, பொதுமக்கள் பாராட்டும் வகையில் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றிவருகிறார்.
இந்த நிலையில், விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட, வெள்ளையம்மாள் புரம் கிராம ஊராட்சி, மந்திகுளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராம், விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளான கத்தாளம்பட்டி, துலுக்கன் குளம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த சின்னப்பன் எம்எல்ஏ, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதனை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் , ஒன்றியச் செயலாளர்கள் பால்ராஜ் , நடராஜன் , மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் போடுசாமி , வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங் , பணி மேற்பார்வையாளர் செல்வ ஜோதி, முன்னாள் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியகுழு பெருந்தலைவர் சோலையப்பன் , அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர்கள் சுபாஷ் சந்திர போஷ் , வெற்றிவேலன் , ஒன்றிய மாணவரணி செயலாளர் ராமநாதன் , ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் கார்த்திக் , வெள்ளையம்மாள் புரம் ஊராட்சி மன்ற தலைவர் அய்யனார், துணைத் தலைவர் அசோக்குமார், ஊராட்சி செயலாளர் செந்தில் பிரியா மற்றும் கழக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.