• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்!

  • Share on

உலக சர்க்கரைநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை கூடுதல் எஸ்பி கோபி தொடங்கி வைத்தார்.

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் உள்ள மத்திய அரசின் மருந்தகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நிகழ்ச்சிக்கு எம்பவர் செயல் இயக்குநர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி ஊடக துறையினருக்கான பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில் :

ஓவ்வொரு மனிதனுக்கும் உடல் நலம் முக்கியம் அதுவும் சர்க்கரை நோய் எந்த வயதில் யாருக்கு எல்லாம் வருகிறது என்று தெரியாத சூழ்நிலை பருவ நிலை மாற்றத்தால் ஏற்படுவது மட்டுமின்றி உணவு பொருட்கள் உண்ணுவதில் மூலம் ஏற்படுகிறது. ஆகவே எல்லோரும் நம்முடைய உடல் நலத்தை பேணி பாதுகாப்பதில் அக்கறை கொண்டு இது போன்ற முகாமை பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்வது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. இந்த அமைப்பின் மூலம் இந்த பணியை சிறப்பாக செய்த அனைவரையும் பாராட்டுகிறேன் என்றார்.

முகாமில் டாக்டர் அருள்பிரகாஷ் அனைவருக்கும் பரிசோதனை செய்தார்.  மேலும் இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் சண்முகசுந்தரம், காட்சன், அன்பழகன், மாணிக்கம், விமல்ராஜ், செந்தில்குமார், மணி கண்டன், மருத்துவதுறை ஊழியர்கள், ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்பவர் பணியாளர்கள் ஜான் வில்மார்ட் தீபக், ஏஞ்சல் ஸ்டெல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிப்படையும் பொதுமக்களுக்கு உதவ 24 மணி நேர காவல் கட்டுப்பாட்டு அறை!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு அபாயம் - எஸ்பி எச்சரிக்கை!

  • Share on