• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிப்படையும் பொதுமக்களுக்கு உதவ 24 மணி நேர காவல் கட்டுப்பாட்டு அறை!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார். 

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கன மழை பெய்து ஆறு, குளம் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. ஆகவே பொதுமக்கள் ஆறு, குளம் மற்றும் நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். இது தவிர அனைத்து உட்கோட்டங்களிலும் அந்தந்த காவல் துணை கண்காணிப் பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் மீட்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

மழை வெள்ளத்தில் பாதிப்படையும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அடங்கிய காவல் துறையினர் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று துவக்கி வைத்துள்ளார்.

பொதுமக்கள் காவல்துறையின் உதவியை 0461-2340393 ரூ 0461-2341248 மற்றும் அலைபேசி எண் 95141 44100 ஆகிய எண்களை எந்த நேரத்திலும் அழைக்கலாம், போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்து உதவுவார்கள். யாராவது ஆபத்தான நிலையில் இருந்தால், அவர்களை பார்க்கும் பொதுமக்கள் மேற்படி தொலைபேசி எண்களை அழைத்து தகவல் தெரிவித்து அவர்களுக்கு உதவுமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்!

  • Share on