• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

  • Share on

தூத்துக்குடியில் குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 3ம் மைல் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி மனைவி ஆறுமுககனி (33). இவரை கடந்த 11.11.2021 அன்று இவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள ஆனந்தராஜ் மகன் செந்தில் (எ) சந்தனகுமார் (33) என்பவர் குடிபோதையில் மேற்படி ஆறுமுககனியிடம் தகராறு செய்து அவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆறுமுககனி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் வழக்குபதிவு செய்து மேற்படி நபரான செந்தில் (எ) சந்தன குமாரை கைது செய்தார்.

  • Share on

பணம் தர மறுத்த மனைவியை தாக்கிய ரவுடி கணவர் கைது!

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிப்படையும் பொதுமக்களுக்கு உதவ 24 மணி நேர காவல் கட்டுப்பாட்டு அறை!

  • Share on