• vilasalnews@gmail.com

பணம் தர மறுத்த மனைவியை தாக்கிய ரவுடி கணவர் கைது!

  • Share on

பணம் தர மறுத்த மனைவியை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கணவரை போலீசார்  கைது செய்தனர்.

கடம்பூர் அரண்மனை தெருவைச் சேர்ந்த  தங்கப்பாண்டி மகன் குருசாமி (எ) குருசாமி பாண்டி (48) என்பவர் அவரது மனைவியான வசந்தா (40) என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு வசந்தா பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த குருசாமி (எ) குருசாமி பாண்டி தனது மனைவி வசந்தாவிடம் தகராறு செய்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து வசந்தா அளித்த புகாரின் பேரில் கடம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து குருசாமி (எ) குருசாமி பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேற்படி கைதுசெய்யப்பட்ட  குருசாமி (எ) குருசாமி பாண்டி என்பவர் மீது கடம்பூர் காவல் நிலையத்தில் அடிதடி, கொலை மிரட்டல் உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 பேர் கைது - 113 மதுபாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

  • Share on