• vilasalnews@gmail.com

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 பேர் கைது - 113 மதுபாட்டில்கள் பறிமுதல்

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 113 மதுபாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற் கொண்டதில் நேற்று (12.11.2021) தூத்துக்குடி தென்பாகம், விளாத்திகுளம், தூத்துக்குடி மது விலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி  மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 4 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 8 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 113 மதுபாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்!

பணம் தர மறுத்த மனைவியை தாக்கிய ரவுடி கணவர் கைது!

  • Share on