• vilasalnews@gmail.com

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்!

  • Share on

காயல்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினம் கொம் புத்துறையைச் சேர்ந்தவர்கள் மார்ட்டின் (வயது 50), பிளவேந்திரன் (60). மீனவர்களான இவர்கள் 2 பேரும் நேற்று அதிகாலையில் நாட்டு படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

கொம்புத்துறையில் இருந்து 16 கடல்மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென பலத்த காற்று வீசியது. இதில் நாட்டுப்படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் விழுந்த 2 மீனவர்களும் தத்தளித்தனர்.

அப்போது கடலில் மற்றொரு படகில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் விரைந்து சென்று மார்ட்டினை காப்பாற்றி, கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடலில் மாயமான பிளவேந்தி ரனை தேடும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் படகில் விரைந்து சென்று, மாயமான மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share on

விளாத்திகுளம் அருகே கல்லூரி பேருந்து மோதி சிறுவன் பலி!

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 பேர் கைது - 113 மதுபாட்டில்கள் பறிமுதல்

  • Share on