• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே கல்லூரி பேருந்து மோதி சிறுவன் பலி!

  • Share on

விளாத்திகுளம் அருகே கல்லூரி பஸ் மோதி சிறுவன் பலியானார்.

விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தையை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தேவாரம் (வயது 7). அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று மாலையில் மேல்மாந்தை கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது வேம்பாரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து தேவாரம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தேவராம் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சூரங்குடி போலீசார்  வழக்கு பதிவு செய்து தனியார் கல்லூரி டிரைவர் தூத்துக்குடி செவலை சேர்ந்த காசி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share on

கயத்தாறு அருகே லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்!

  • Share on