• vilasalnews@gmail.com

கயத்தாறு அருகே லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

  • Share on

கயத்தாறு அருகே புதிதாக போடப்பட்ட பேவர் பிளாக் சாலையை சேதப்படுத்திய லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கயத்தாறு அருகே அய்யனாரூத்து கிராமத்தில் தெற்கு கீழத்தெருவில் கயத்தாறு யூனியன் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பேவர் பிளாக் சாலையும் வாறு காலும் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலையில் 15 டன் எடை கொண்ட லாரி ஒன்று சிமெண்டு மூட்டை களை ஏற்றிக்கொண்டு அந்த சாலை வழியாக சென்றது. அதிக பாரத்தை தாங்காமல் புதிதாக சாலையில் போடப்பட்ட பேவர் பிளாக் கற்கள் உடைந்து சேதமடைந்தது. மேலும் புதிதாக கட்டப்பட்ட வாறுகாலும் உடைந்து போனது.

இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு சென்று லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப் பட்டது. கயத்தாறு காவல் உதவியாளர் மாரியப்பன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பஞ்சாயத்து தலைவர் சண்முகை யா மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

இதில் லாரி தரப்பினர் மூலம் மீண்டும் சாலை சீரமைக்கப்படும், வாறுகால் கட்டித் தரப்படும் என பேசி முடிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து  சிறைபிடிக்கப்பட்ட லாரி விடுவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

  • Share on

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளறுபடி தமிழக மீனவ மக்கள் கட்சி குற்றச்சாட்டு!

விளாத்திகுளம் அருகே கல்லூரி பேருந்து மோதி சிறுவன் பலி!

  • Share on