ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:
ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் உள்ள சுமார் 11 வகுப்பறைகள் பழுதடைந்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு கருதி பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புது கட்டிடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் புதிதாக கட்டிடம் கட்டும் வரை மாற்று இடமாகிய சிறுதொண்டநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்படு வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
அச்சமயம் மாணவிகள் ஏரலில் இருந்து சிறுதொண்டநல்லூரில் உள்ள பள்ளிக்கு சென்று வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, ஏரல் வட்டாட்சியர் கண்ணன், உதவி பொறியாளர் அருண்குமார் மற்றும் ஆசிரியர்கள், வியாபாரி சங்கங்களை சார்ந்தவர்கள், அரசு போக்குவரத் துக்கழக அலுவலர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.