ஓட்டப்பிடாரம் அருகே மரத்தில் பைக் மோதியதில் படுகாயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் செல்வக்குமார் (28). இவர் ஓட்டப்பிடாரத்தில் இருந்து குறுக்கு சாலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேல லட்சுமிபுரம் அருகே செல்லும் போது திடீரென நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்தில் பைக் மோதியது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முத்துராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.