தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரத் துக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழக அரசிற்கு சைவ வேளாளர் சங்கம், தமிழ்நாடு வஉசி அனைத்து பேரவை உள்ளிட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி சைவ வேளாளர் சங்க தலைவர் தெய்வநாயகம், தமிழ்நாடு வஉசி அனைத்து பேரவை அமைப்பு நிர்வாகிகள் கீதாசெல்வமாரியப்பன், நெல்லையப்பன், ஆகியோர் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் :
சுதந்திர போராட்ட தியாகி செக்கிழத்த செம்மல் தேசத்திற்கு தன்னையே அற்பணித்த வ.உ.சிதம்பரபிள்ளை அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து, தூத்துக்குடி பிரதான சாலைக்கு வஉசி சாலை என பெயர் சூட்டிய தற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அதற்காக பெரும் முயற்சி எடுத்த கனிமொழி எம்.பி, சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கும் சமுதாய மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டு வரும் 18ம் தேதி வ.உ.சியின் 85வது ஆண்டு குருபூஜை விழா தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி அரசுக்கு வேண்டு கோளாக வஉசி திருவுருவ சிலைக்கு தங்க கவசமும் தூத்துக்குடியில் மணிமண்டபமும் அமைத்து தரவேண்டும் என்று சமுதாய மக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.