• vilasalnews@gmail.com

சிறுவர்களுக்கு குடிக்க மதுபானம் கொடுத்ததில் முன்விரோதம் - கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது!

  • Share on

எப்போதும்வென்றான் அருகே சிறுவர்களுக்கு குடிக்க மதுபானம் கொடுத்ததை தட்டிக்கேட்ட முன்விரோதத்தில், கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

எப்போதும்வென்றான் கிழக்குத் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் முத்துச்செல்வம் (22) என்பவர் அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு குடிக்க மதுபானம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த எப்போதும்வென்றான் முத்து நகரைச் சேர்ந்த கணேசன் மகன் அருள்ராஜ் (27) என்பவர் முத்துசெல்வத்தை சத்தம் போட்டுள்ளார்.

இந்த முன்விரோதம் காரணமாக நேற்று (05.11.2021) அருள்ராஜ் மற்றும் அவரது நண்பரான எப்போதும்வென்றான் முத்துநகரைச் சேர்ந்த சித்திரை குமார் மகன் கார்த்திக் (25) ஆகியோர் எப்போதும்வென்றான் கிழக்குத் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடம் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த முத்துச்செல்வம், அருள்ராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அருள்ராஜ் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது வழக்குப்பதிவு செய்து முத்துசெல்வத்தை கைது செய்தார்.

  • Share on

தூத்துக்குடியில் மது அருந்த அறை ஒதுக்காததால் ஆத்திரம் : காவலாளியை தாக்கிய திமுக பிரமுகர்!

திருச்செந்தூர் : சூரனை வேல் கொண்டு வதம் செய்த முருகன்!

  • Share on