• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் அருகே மாடு திருடியவர் கைது!

  • Share on

சாத்தான்குளம் அருகே மாடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் ஞானசுந்தர் (27) என்பவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28.10.2021 அன்று அவருடைய வீட்டில் இருந்த மாடு ஒன்று காணாமல் போனது.

இதுகுறித்து ஞானசுந்தர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில்  சாத்தான்குளம் அமுதுண்ணகுடி பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் சுந்தர் (எ) பேத்தான் (35) என்பவர் லோடு வேனில் மாட்டை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்து சுந்தர் (எ) பேத்தானை கைது செய்து சிறையில் அடைத்தார்.

  • Share on

தீபாவளிக்கு வெளியாகும் எனிமி : மாவட்ட மன்ற நிர்வாகிகள் ஆலோசனை!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு!

  • Share on