ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வேதாந்தா நிறுவன கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் , வேதாந்த நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.