• vilasalnews@gmail.com

வடகிழக்கு பருவமழை தீவிரம் - பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறும்,  வீட்டில் மின்சாதனங்களை மிகவும் கவனமாக கையாளுமாறும், வெளியில் செல்லும் போது மின் கம்பிகளோ, கம்பங்களோ சரிந்த நிலையில் உள்ளனவா எனவும்,  குழிகள் ஏதும் உள்ளனவா எனவும் பார்த்து கவனமாக செல்லுமாறும்,  பழுதடைந்த கட்டிடங்களில் மழைக்கு ஒதுங்க வேண்டாம் எனவும்,  இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும், அத்தியாவசிய தேவைகளுக்காக செல்ல நேரிட்டால் விஷ பூச்சிகளிடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ளும் வகைக்கு கையில் டார்ச் லைட் மற்றும் கைத்தடியுடன் செல்லுமாறும், இடி மின்னலின் போது வெட்ட வெளி, மரங்கள் மற்றும் கட்டிடங்களின் வெளியே நிற்க வேண்டாம் எனவும், ஆறு , வாய்க்கால், குளம் மற்றும் குட்டைகளில் குளிகக் செல்ல வேண்டாம் எனவும் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேலும், குடிநீரை நன்கு கொதிக்க வைத்து பயன்படுத்திடவும்,  காய்ச்சல், இருமல், ஜலதோஷம் மற்றும் வயிற்றுபோக்கு போன்றவை தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பேரிடர் தொடர்பான அவசர தேவைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077, தொலைபேசி எண்: 0461-2340101 மற்றும் வாட்ஸ் அப் எண் : 94864 54714 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share on

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - தமிழக அரசு

வடகிழக்கு பருவமழை தீவிரம் : தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

  • Share on