நடிகர் விஷால் நடித்த எனிமி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மாவட்ட தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், கருணாகரன், மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எனிமி.
நவம்பர் 4 ஆம் தேதி அதாவது தீபாவளி அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தை திரையங்குகளில் வரவேற்று கொண்டாடுவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட விஷால் மக்கள் நல இயக்க சார்பில் மாவட்ட தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
இதில் மாவட்ட தலைவர் ஆர்.வி.பிரகாஷ், சட்ட ஆலோசகர் நாகராஜ், ஒன்றிய துணை செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் முத்து செல்வன், அருள் ஆனந்தன், ரோகித், கார்த்திக், கண்ணதாசன், வெற்றி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டணர்.