தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கந்த சஷ்டியை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி இன்று (3ம் தேதி) நடக்கிறது.
4ம் தேதி விழா துவங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து வரும் 9-ஆம் தேதி மாலை 4.35 மணிக்கு வேல் வாங்குதல், பின் 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்க உள்ளது.
வரும் 10ஆம் தேதி இரவு 7 மணிக்கு கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 7 மணிக்கு வீதி உலா நடைபெற இருக்கிறது. 13 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பைரவர் பூஜை நடக்க உள்ளது.