• vilasalnews@gmail.com

நவ.9ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

  • Share on

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

 "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தர் சஷ்டி திருவிழா - சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு 09.11.2021 செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

எனினும், அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப் படுகிறது. மேலும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.  மேற்படி நாளில் திருக்கோவிலில் நடைபெறும் அனைத்து வித  நிகழச்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ள தடை இருக்கின்ற காரணத்தால் உள்ளூர் தொலைக்காட்சிகள்  மூலம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஆகவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்;படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 27.11.2021 சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது" என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்!

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் - சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை : எஸ்.பி!

  • Share on