தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 461 மிமீ மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் குமரி மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. தூத்துக்குடி, திருச்செந்தூரிலுள்ள முக்கிய சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மழை நீரை அகற்றக்கோரி பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் மின்கசிவு காரணமாக கோவில்பட்டி தாலுகாவில் 2பேர் உயிரிழந்துள்ளனர். 10 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 461 மிமீ மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பதிவான மழை அளவு வருமாறு:
1.திருச்செந்தூர்: 23 மி.மீ
2.காயல்பட்டினம்: 32 மி.மீ
3. குலசேகரப்பட்டினம்: 9 மி.மீ
4. விளாத்திகுளம்: 41 மி.மீ
5. காடல்குடி: 23 மி.மீ
6. வைப்பார்: 37 மி.மீ
7. சூரங்குடி: 33 மி.மீ
8. கோவில்பட்டி: 30 மி.மீ
9. கழுகுமலை: 7 மி.மீ
10.கயத்தார்: 30 மி.மீ
11.கடம்பூர்: 31 மி.மீ
12.ஒட்டப்பிடாரம்: 19 மி.மீ
13.மணியாச்சி: 40 மி.மீ
14.வேதநத்தம்: 30 மி.மீ
15.கீழஅரசடி: 3 மி.மீ
16.எட்டயபுரம்: 51.8 மி.மீ
17.சாத்தான்குளம்: 6.8 மி.மீ
18.சீர்வைகுண்டம்: 12 மி.மீ
19.தூத்துக்குடி: 2.4 மி.மீ
மொத்தம்: 461 மிமீ
சராசரி: 24.26 மிமீ