தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார்.
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங் களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழகத்தில் ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின் றன. தொடரந்து, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
அதன்படி கொரோனா நெறிமுறை களுடன் இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு வரும் மாணவ -மாணவிகளை ஆசியர்கள் பூக்கள் கொடுத்தும், சாக்லெட் வழங்கியும் வரவேற்றனர். மாணவர்கள்- மாணவிகளும் உற்சாகத்துடன் வகுப்பறைக்குள் சென்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோடுல் உள்ள மாநகராட்சி பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மாணவ, மாணவிகளை வரவேற்றார்கள்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முதன்மை கல்வி அலுவலர், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.