• vilasalnews@gmail.com

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : நல வாரிய இறப்பு நிதியுதவி திட்டம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1,70,000க்கான காசோலை வழங்கல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்  கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று (01.11.2021) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொது மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

மேலும், முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள் மற்றும் நீண்ட நாள் மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத் தினார்கள்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரிய இறப்பு நிதியுதவி திட்டம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1,70,000க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அமுதா, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் வீரபத்திரன், உதவி ஆணையர் (கலால்) செல்வநாயகம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர கால நீட்டிப்பு!

19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு : மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு!

  • Share on