• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர கால நீட்டிப்பு!

  • Share on

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம்) ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 18.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் 18.11.2021 வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர விரும்புவோர் 8-ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், 5 பாஸ்போட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்கள் கொண்டு வந்து தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

மாதந்தோறும் உதவி தொகை ரூ.750 (வருகை நாட்களுக்கு ஏற்ப)

கட்டணமில்லா பேருந்து சலுகை

விலையில்லா மிதிவண்டி

விலையில்லா மடிக்கணினி

விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள்

விலையில்லா சீருடை - ஒருசெட்

விலையில்லா காலணி – ஒருசெட்

பயிற்சிக்கு தேவையான நுகர் பொருட்கள்

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர்  முதல்வர் அவர்களை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணைஇயக்குநர்  முதல்வர் பழனி தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியீடு!

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : நல வாரிய இறப்பு நிதியுதவி திட்டம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1,70,000க்கான காசோலை வழங்கல்!

  • Share on