தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை இன்று (01.11.2021) வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
01.01.2022 தேதியினை தகுதிநாளாக கொண்டுவாக்காளர் பட்டியல் சிறப்புசுருக்கமுறைத் திருத்தம்-2021 பணியானது 01.11.2021அன்றுமுதல் நடைபெறஉள்ளது. 01.11.2021முதல் 30.11.2021முடியவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், ஒரேசட்டமன்ற தொகுதிக்குள் முகவரிமாற்றம் செய்தல்ஆகியவற்றிற்கு விண்ணப்ப படிவங்கள் பெறப்படும். 01.01.2022அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் அதாவது 31.12.2003 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள் வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ளலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தங்களின் பெயரைவாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற் றிற்கான விண்ணப்ப படிவங்களை அனைத்துவேலை நாட்களில் காலை 10.00 மணிமுதல் மாலை 05.00 மணி முடிய சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிமையத்தில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள நியமன அலுவலரிடமிருந்துபெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மேற்படி அலுவலரிடம் அளிக்கப்பட வேண்டும்.
இதற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்-2022 பணிக்காக சிறப்புமுகாம்கள் 13.11.2021 (சனிக்கிழமை), 14.11.2021 (ஞாயிற்றுக்கிழமை), 27.11.2021 (சனிக்கிழமை) மற்றும் 28.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெறஉள்ளது.
மேற்படி சிறப்பு முகாம் நாட்களில் காலை 09.30 மணிமுதல் மாலை 05.30 மணி முடிய சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிமையத்தில் விண்ணப் பங்களைஅளிக்கலாம்.
மேலும்,கொரோனாநோய் தொற்றைத் தவிர்க்கும் பொருட்டுபொதுமக்கள் கைபேசி மற்றும் கணினியில் online மூலமாக www.nvsp.inஎன்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பம் அளிக்கலாம். மேலும்,வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு மேற்கண்ட இணைய தளத்தில்படிவம் 6-ல் தங்களது புகைப்படத்தினைஅடையாளச் சான்றாகவும், ஆதார் அட்டையினை முகவரிச் சான்றாகவும் பதிவேற்றம் செய்தும்பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் தகவல்களை பெறவும் மற்றும் இடர்பாடுகள் இருப்பின் தெரிவிக்கவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய இலவச தொலைபேசிஎண் 0461-1950ல் தொடர்புகொள்ளலாம். மேலும் தங்கள் பகுதிவட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பொது மக்கள் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மற்றும் சிறப்புமுகாம் வாய்ப்பினை பயன்படுத்திவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரிமாற்றம் செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் வட்டாட்சியர் ரகு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தானம் (அ.இ.அ.தி.மு.க.), ரவி, அக்னல் (தி.மு.க.), மான்சிங் (பா.ஜ.க.), முத்துமணி, முரளிதரன் (காங்கிரஸ்), ராஜா (சி.பி.எம்), மாடசாமி, ஞானசேகரன் (சி.பி.ஐ), வரதராஜ் (என்.சி.பி), மாணிக்கராஜ், மணிகண்ட.ன் (பி.எஸ்.பி) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.