தூத்துக்குடியில் தொழிலதிபரிடம் பணம், செல்போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் சபரிகுமார் (39). தொழிலதிபரான இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒரு மிட்டாய் கம்பெனி அருகில் நின்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 மர்ம ஆசாமிகள் இவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 38 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்ப முயன்றனர்.அப்போது சபரிகுமார் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை விரட்டினர்.
அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2பேரையும் பிடித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர். போலீசார் விசாரணை நடத்தி தூத்துக்குடி கேடிசி நகரை சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் வசந்தகுமார் (20), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் செல்வப்ரபு (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் மீட்கப்பட்டது. மேலும் தப்பி ஓடிய தாளமுத்து நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் கார்த்திக் (28) என்பவரை தேடி வருகிறார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.