16 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி சூரநாயக்கன்பட்டி தெருவைச் சேர்ந்த கனேசன் மகன் தாமரை செல்வம் (23) என்பவர் நேற்று (31.10.2021) விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்கா அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் கலா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தாமரைச்செல்வனை கைது செய்தார்.