தூத்துக்குடியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வ உ சிதம்பரனார் கல்லூரியில் நடைபெற்றது.
ஆண்டு தோறும் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையடுத்து, தூத்துக்குடி வஉசி கல்லுரியில் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு மற்றும் கல்லூரி இளைஞர் நலத் துறை சார்பாக வ.உ.சி கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசுகையில், லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு. இளைஞர்கள் லஞ்சத்தை தடுக்க முன் வர வேண்டும். லஞ்சம் தொடர்பாக அறிந்தால், உடனடியாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்” என கூறினார்.
பின்னர், மாணவ மாணவிகள் அனைவரும் லஞ்சம் வாங்க மாட்டோம் என உறுதி மொழி எடுத்து கொண்டனர். லஞ்சத்தை குறித்து விழிப்புணர்வை மாணவ, மணவிகளிடையே நடித்து காட்டப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் வ.உ.சி கல்லூரி முதல்வர் வீரபாகு, ஆய்வாளர் சுதா, ஜெயசீலி மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.