மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (30.10.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அக்.29, 30 மற்றும் 31 ஆகிய 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (30.10.2021 ) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.