• vilasalnews@gmail.com

ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கம் : 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பும் போராட்டம்!

  • Share on

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் சார்பாக 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இரண்டாம் கட்ட போராட்டமாக கோட்டையை நோக்கி கோரிக்கை கடிதம் அனுப்பும் போராட்டம் மாநிலம் முழுவதும் இன்று (29.10.2021) நடக்கிறது.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தலைமை தபால் நிலையத்தில் கடிதம் அனுப்பும் போராட்டம் மாவட்ட தலைவர் கருப்பசாமி அவர்கள் தலைமையில், கசாலி  மரைக்காயர் அவர்களின் முன்னிலையில் இன்று காலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கணேச பாண்டியன் கலந்து கொண்டார். 

பின்னர் அவர்கள் கோரிக்கைகளாவது

கொரோனா பேரிட காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த ரூபாய் 15,000 ஊக்கத்தொகை உடனே வழங்கிட வேண்டும்.

புயல் வெள்ளம், வறட்சி நோய் தொற்று உள்ளிட்ட பேரிடர் ஏற்படும் போது அனைத்து பணிகளையும் ஊரக வளர்ச்சித்துறை முழு அளவில் செய்து வருகிறது. இதற்கான பணியாளர் கூட்டமைப்பு ஊரக வளர்ச்சித் துறையில் உள்ளது. எனவே பேரிடர் மேலாண்மை துறையை ஊரக வளர்ச்சி துறையில் இணைத்து ஊரக வளர்ச்சி ஊராட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை துறையாக  இத்துறையை மாற்றிட வேண்டும்.

மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனங்களில் தற்காலிக கணினி விரிவுரையாளராக பணியாற்றி வருவோர் பணிக்காலம் மற்றும் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.

என 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி ஊரக ஊரக வளர்ச்சி துறையை சார்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு தபால் நிலையத்தில் மனு அனுப்பினர்.

  • Share on

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா நவ.4ல் தொடக்கம்: நவ.9ல் சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு அனுமதியில்லை!

புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் பாஸ்கரன் ஆசிரியர்களிடம் ரூ.10,000 வசூல் செய்ததாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றச்சாட்டு!

  • Share on