• vilasalnews@gmail.com

மாநில அளவிலான ஜூடோ போட்டி : தூத்துக்குடி மாணவ- மாணவிகள் சாதனை!

  • Share on

மாநில அளவில் நடைபெற்ற ஜூடோ போட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட மாணவ, மாணவியர் பல்வேறு பதக்கங்களை வாங்கி சாதனை புரிந்துள்ளனர்.

கடந்த 22, 23, 24 ஆகிய நாட்களில், திருச்சி மாவட்டத்தில் கொங்குநாடு இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் தமிழ்நாடு மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் நடைபெற்றது. இதில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

இப்போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து  கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று 3 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்கள் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் விபரம் பின்வருமாறு :

1) ஜானகி - தங்கப் பதக்கம்

2) அலினா - தங்கப் பதக்கம்

3) பிரித்விக்ராஜா - தங்கப் பதக்கம்

4) கிராஸ்வின் - வெள்ளி பதக்கம்

5) லாராஜாய் - வெள்ளி பதக்கம்

6) கல்யாண் - வெள்ளி பதக்கம்

7) அசோக்குமார் - வெள்ளி பதக்கம்

8) ஜெயக்குமார் - வெண்கலப் பதக்கம்

9) ரிகானா - வெண்கலப் பதக்கம்

10) ஜோஷ்வா - வெண்கலப் பதக்கம்

பெற்றனர்

மேலும், மினி சப்ஜுனியர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டம் ஓவரால் சேம்பியன் சிப்பில் 3ம் இடத்தை பிடித்தது அதற்கான சுழற் கோப்பையை பரிசாக பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடதக்கது.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பயிற்சியாளர்கள் முத்துசங்கர், குமார், ஸ்டீபன், சங்கர் குமார், மில்டன், விக்னேஷ்,மெல்வின் ஆகியோர்களை தமிழ்நாடு ஜூடோ சங்க தலைவர் விஜயமோகன முரளி, பொதுசெயலாளர் முரளி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சென்சாய் உமாசங்கர், டெக்னிகல் கமிட்டி சேர்மன் சென்சாய் மணிகண்டன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் வின்சென்ட், தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் ஜூடோ சங்கத்தின் தலைவர், மாணிக்கராஜ், செயலாளர் ராமலிங்க பாரதி ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்

  • Share on

மயான பொதுப்பாதையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு - அகற்ற கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா நவ.4ல் தொடக்கம்: நவ.9ல் சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு அனுமதியில்லை!

  • Share on