பி.ஜெகவீரபுரம் (எ) சீல்நாயக்கன் பட்டி கிராமத்தில் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ள மயான பொதுப்பாதையை அகற்ற கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், கே.குமரெட்டியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.ஜெகவீரபுரம் (எ) சீல்நாயக்கன் பட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பொதுப்பாதையை ( புல எண் 352/38 , 307/14 ) சில தனிநபர்கள் ஆக்கிரமித்து, ஆட்டுக்கொட்டகை, குடியிருப்பு வீடுகளை உள்ளிட்டவைகளை அமைத்து, மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல முடியாமல் பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஆகவே, தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மயான பொதுப்பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்படுத்தி தர கிராம பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.