மழைவளம் வேண்டியும், விவாயம் செழிக்க வேண்டியும் மேல்மருவத்தூர் ஆதிபரசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் நாகலாபுரம் புதூரில் கிராம நல வழிபாடு நடைபெற்றது.
மேல்மருவத்தூர் அருட்பெருந் தெய்வம் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் விளாத்திகுளம் தாலுகா, நாகலாபுரம் புதூர் மெயின்ரோட்டில் உள்ள பிள்ளையார் கோவில் வளாகத்தில் வைத்து மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம் பெறவும், மக்கள் வளமுடன் வாழவும் கிராம நல வழிபாடு, வளைகாப்பு விழா, அன்னதானம் நடைபெற்றது.
இந்த கிராம நல வழிபாட்டில் புதூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 108 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். குழந்தை பேறு வேண்டி 72 மகளிருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்கம் செய்திருந்தது. விழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், அருட்பிரசாதம், அன்னையின் திருவுருவப்படம் ஆகியவை வழங்கப்பட்டது.
விழாவில் ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி ஆர். முருகன், பொருளாளர் கண்ணன், இணைச் செயலாளர்கள் முத்தையா, செல்லதுரை, வேலு, திருவிக நகர் சக்திபீட மகளிர் அணி நிரவாகிகள் பிரமிளா, காசியம்மாள், சாந்தி, வசந்தா, விஜயா, குளத்தூர் மன்றத் தலைவர் செல்வம், வேப்பலோடை மன்றத் தலைவர் செல்வம், புதூர் மன்றத் தலைவி துர்க்காதேவி, எட்டயபுரம் மன்ற இளைஞர் அணித் தலைவர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.