• vilasalnews@gmail.com

எப்போதும்வென்றான் அருகே புகையிலை பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது!

  • Share on

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்  மேற்பார்வையில் போலீசார் ஆங்காங்கே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஜின்னா பீர்முகமது  தலைமையில் உதவி ஆய்வாளர் செந்தில்வேல் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா மற்றும் காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று (23.10.2021) சிவஞானபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்த சர்க்கரை என்பவரது மகன் அறிவழகன் (42) என்பவர் அவரது வீட்டிற்கு அருகே    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 44,300/- மதிப்புள்ள 45 கிலோ 200 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் மின்தடை : எப்போது? எங்கே தெரியுமா?

மழைவளம் வேண்டி புதூரில் கிராம நல வழிபாடு!

  • Share on