தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் :
"26.10.2021 செவ்வாய் கிழமை அன்று அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, தாளமுத்து நகர், சிலுவைப்பட்டி, கிருஷ்ண ராஜபுரம், முத்துகிருஷ்ணா புரம், திரேஸ்புரம், பூபால்ராயபுரம், லூர்தம்மாள்புரம், அலங்காரதட்டு, மேல அரசடி, கீழஅரசடி, வெள்ள பட்டி, தருவைகுளம், பட்டிண மருதூர், பனையூர், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், பூபாலராயர் புரம், மாணிக்கபுரம், குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல்புரம், முத்துகிருஷ்ணா புரம். ராமர் விளை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.