மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன், எட்டையாபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் புதிய கட்டிடத்தை மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் சக்தி.R.முருகன் திறந்துவைத்தார்.
மழைவளம் வேண்டியும், இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி கலச விளக்குவேள்வி பூஜைகளுடன் நடைபெற்றது. சிறப்பு சங்கல்பம் செய்து 108, 1008 தமிழ் மந்திரங்கள் படித்து ஏராளமான மகளிர் குங்குமம் மற்றும் மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். வேள்விக்குழு தலைவர் கிருஷ்ண நீலா தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், சேலைகள், வேஷ்டிகள் வழங்கப்பட்டது. மகளிர் அணி தலைவி கோவில்பட்டி பத்மாவதி வழங்கினார்.
1000த்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தணிக்கை இணை செயலாளர் வேலு தொடங்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட துணைத் தலைவர் பண்டாரமுருகன் பொருளாளர் கண்ணன், இணைச் செயலாளர்கள் முத்தையா, செல்லத்துரை உட்பட முகாம் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தாப்பாத்தி கிராமம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் ஆன்மிக இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.