வாலசமுத்திரம் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக அசோக்குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடந்தது. இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் கடந்த 12-ந்தேதி எண்ணப்பட்டன.
இதில், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வாலசமுத்திரம் ஊராட்சியில் காலியாக உள்ள தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான நடைபெற்ற தேர்தலில், "வலசை" அசோக்குமார் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து அவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர், செயலர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.