நாடு முழுவதும் 100 கோடி கொரோனா தடுப்பூசி தவணைகளை செலுத்தி இந்தியா சாதனை படைக்க காரணமாக இருந்த சுகாதார பணியாளர்களுக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
நாடு முழுவதும் இதுவரை 100 கோடி கொரோனா தடுப்பூசி தவணைகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்காக அரும்பாடுபட்ட மருந்துவர்கள் செவிலியர்கள், முன்கள பணியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவரே கையொப்பம் இட்ட வாழ்த்து அட்டையை அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கியுள்ளார். இதையொட்டி இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருந்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பிரதமர் வழங்கிய வாழ்த்து அட்டையை வழங்கினர்.
மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளையும் சந்தித்து வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். இதில் மாவட்ட தலைவர் பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ஓபிசி பிரிவி மாநில செயலாளர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாவட்ட துணை தலைவர் தங்கம் மாரியம்மாள், மாவட்ட செயலாளர் வீரமணி, மாவட்ட பொதுச் செயலாளர் பிரபு, வடக்கு மண்டல தலைவர் கனகராஜ், பொது செயலாளர் செல்லப்பா, மேற்கு மண்டல தலைவர் முத்துகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மாவட்ட தலைவர் காளிராஜா, மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.