எப்போதும் வென்றான் அருகே ஆதனூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக கம்பால் தாக்கி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
எப்போதும்வென்றான் ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து மகன் இருளப்பசாமி (37) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆதிலிங்கம் மகன் உத்தண்டு ராம்குமார் (எ) பன்னி குமார் (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (12.10.2021) இருளப்பசாமி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த உத்தண்டு ராம்குமார் (எ) பன்னி குமார் இருளப்பசாமியிடம் தகராறு செய்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இருளப்பசாமி அளித்த புகாரின் பேரில் எப்போதும் வென்றான் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல் முருகன் வழக்குப்பதிவு செய்து உத்தண்டு ராம்குமார் (எ) பன்னி குமாரை கைது செய்தார்.