• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு!

  • Share on

தூத்துக்குடி அருகே அமைக்கப்பட உள்ள எண்ணெய் சுத்தரிகரிப்பு ஆலையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

தூத்துக்குடி அருகே உள்ள அல்லிக்குளம், ராமசாமிபுரம், கீழதட்டப்பாறை, மேல தட்டப்பாறை, உமரிகோட்டை, பேரூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற் கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தப் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப் பட்டால் காட்டாற்று ஓடை மறிக்கப் பட்டு, மேல தட்டப்பாறை, கீழதட்டப் பாறை, தெற்கு சிலுக்கன்பட்டி, மறவன்மடம், அந்தோணியார் புரம், கோரம்பள்ளம் வழியாக தூத்துக் குடி புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் மழை வெள்ளம் போகும் அபாயம் உள்ளது.

ஆகையால் அந்தப் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பது கைவிட்டு வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி - கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!

தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் : வெற்றி பெற்றோா் விவரம்!

  • Share on